சாம்சங் நிறுவனத்தின் சாம்சங் கேலக்ஸி A71 மற்றும் A51 மொபைலின் விலை ரூ.2000 வரைக்கும் குறைக்கப்பட்டுள்ளது.
சாம்சங் கேலக்ஸி ஏ 71 மற்றும் கேலக்ஸி ஏ 51 ஆகிய இரண்டு பிரபலமான கேலக்ஸி ஏ சீரிஸ் ஸ்மார்ட்போன்களில் விலையை சாம்சங் குறைத்துள்ளது
கேலக்ஸி ஏ 71 மற்றும் ஏ 51 வாங்கினால் வாடிக்கையாளர்கள் இப்போது ரூ .2000 தள்ளுபடியைப் பெறலாம். கேலக்ஸி ஏ 71 ஸ்மார்ட்போனின் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் விருப்பமானது ரூ.27,499 என்கிற புதிய விலையின் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதாவது கடைசியாக திருத்தப்பட்ட விலையான ரூ.29,499 இலிருந்து ரூ.2,000 என்கிற விலைக்குறைப்பை இந்த மொபைல் பெற்றுள்ளது.
சாம்சங் கேலக்ஸி ஏ 51 ஸ்மார்ட்போனின் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் மாடலானது ரூ.20,999 என்கிற புதிய விலையின் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதாவது கடைசியாக அறிவிக்கப்பட்ட தள்ளுபடி விலையான ரூ.22,999 இலிருந்து ரூ.2000 என்கிற விலைக்குறைப்பை பெற்றுள்ளது.