வாட்ஸ் அப்பில் அறிமுகமாகும் அட்டகாசமான அப்டேட் !

WhatsApp Is Currently Working On Multi-Device Support!

நீண்ட நாட்களாக வாட்ஸ்-அப் செயலியில் எதிர்பார்க்கப்படும் ஒரு முக்கிய அப்டேட்டை வாட்ஸ்அப் விரைவில் கொடுக்க இருக்கின்றது. அதாவது பல சாதனங்களில் ஒரே வாட்ஸ்அப் கணக்கைப் பயன்படுத்தலாம்.

புரியும்படி சொல்ல வேண்டும் என்றால் நீங்கள் ஒரு புதிய கணக்கை உருவாக்காமல் பல சாதனங்களில் உங்கள் அதே வாட்ஸ்அப் கணக்கைப் பயன்படுத்த முடியும். 

WABetaInfo இணையதளத்தில் வெளியிடப்பட்ட அறிக்கையில் இந்த தகவல் வெளிவந்துள்ளது. இந்த அப்டேட் கூடிய சீக்கிரம் வாட்ஸ்அப் பயன்படுத்தும் அனைத்து பயனர்களுக்கும் கிடைக்கும் என எதிர்பார்க்கலாம்.