பின்வாங்கியது வாட்ஸ் அப் ? பிப்ரவரி 8, 2021 முதல் வாட்ஸ் அப் செயல்படுமா !

வாட்ஸ்அப் நிறுவனம் சமீபத்தில் புதிய பிரவேசி அப்டேட் ஒன்றை வெளியிட்டது. இதற்கு பயனாளர்கள் மத்தியில் கடும்  எதிர்ப்பு ஏற்பட்டதை அடுத்து, வாட்ஸ்அப் நிறுவனம் இதிலிருந்து சற்று பின்வாங்கி உள்ளது..

பேஸ்புக் நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்அப் நிறுவனம் சமீபத்தில் ஒரு பாப் அப் மூலமாக தங்களுடைய பயனர்களுக்கு ஒரு செய்தியை அனுப்பியது. அதாவது வாட்ஸ்அப் நிறுவனம் தங்களுடைய பிரைவசி பாலிசியை  புதுப்பித்துள்ளது

வாட்ஸ் அப் செயலியில் நாம் பகிரும் தகவல்களை பேஸ்புக் நிறுவனத்திற்கு வாட்ஸ்அப் பகிர இருக்கின்றது இதற்கு பயனாளர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்தப் புதிய விதிமுறைகளுக்கு அனைத்து பயனாளர்களும் கண்டிப்பாக ஒப்புதல்(Agree) அளிக்க வேண்டும் இல்லை என்றால் பிப்ரவரி 8 க்கு பின்பு வாட்ஸ் அப் செயலியைப் பயன்படுத்த முடியாது என்று வாட்ஸ்அப் ஏற்கனவே தெரிவித்திருந்தது.

இதையடுத்து பல்வேறு வாட்ஸ் அப் பயனாளர்கள் வாட்ஸ் அப் செயலியை தங்களுடைய மொபைலில் இருந்து நீக்கிவிட்டு வாட்ஸ்அப் செயலிக்கு மாற்றாக  சிக்னல் மற்றும்  டெலிகிராம் செயலிகளை பயன்படுத்த தொடங்கினார்கள். இதைக் கருத்தில் கொண்டு வாட்ஸ்அப் நிறுவனம் தற்போது ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது.

பிப்ரவரி 8, 2021 முதல் வாட்ஸ் அப் செயல்படுமா !

வாட்ஸ்அப் வெளியிட்டிருக்கும் இந்த புதிய அறிவிப்பில், எங்களுடைய சமீபத்திய புதிய பிரவேசி அப்டேட் பலருக்கும் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது  மேலும் இதை சார்ந்த பல்வேறு வதந்திகளும் உலாவி வருவது எங்களை கவலை அடைய வைத்துள்ளது. வாட்ஸ் அப்பில் பகிரப்படும் எந்த ஒரு தகவலையும் நாங்கள் பேஸ்புக் நிறுவனத்துடன் பகிர மாட்டோம்.

உங்களுடைய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் நீங்கள் பகிரும் தகவல்கள் அனைத்தும் உங்களுக்கு உள்ளே இருக்கும் நாங்கள் அதை எக்காரணத்தைக் கொண்டும் பார்க்க மாட்டோம். இதன் பொருள் என்னவென்றால், உங்கள் தனிப்பட்ட உரையாடல்கள் எப்போதும் பாதுகாப்பாக இருக்கும்.

இன்றைய சூழ்நிலையில் நீங்கள் வாட்ஸ் அப் மூலமாக ஆன்லைனில் பொருட்கள் வாங்கவில்லை என்றாலும் எதிர்காலத்தில் கண்டிப்பாக ஆன்லைன் மூலம் பொருட்களை வாங்க வாட்ஸ்ஆப்பை  பயன்படுத்துவீர்கள் என்று நாங்கள் நம்புகின்றோம். 

விதிமுறைகளை மதிப்பாய்வு செய்து ஏற்றுக்கொள்ளும்படி மக்களிடம் கேட்கப்படும் தேதியை நாங்கள் இப்போது நகர்த்தி வருகிறோம். பிப்ரவரி 8 ஆம் தேதி யாரும் தங்கள் கணக்கை இடைநிறுத்தவோ நீக்கவோ மாட்டார்கள். வாட்ஸ்அப்பில் தனியுரிமை மற்றும் பாதுகாப்பு எவ்வாறு செயல்படுகிறது என்பது பற்றிய தவறான தகவலைத் தீர்க்க நாங்கள் இன்னும் நிறைய செய்யப் போகிறோம். மே 15 அன்று புதிய வணிக விருப்பங்கள் கிடைப்பதற்கு முன்பு, படிப்படியாக மக்களிடம் எங்களுடைய சேவைகளை கொண்டு செல்வோம் என்று வாட்ஸ்அப் கூறியுள்ளது.