பயப்படாதீங்க..! புதிய Privacy policy பற்றி விளக்கம் அளித்த வாட்ஸ் அப்

யாரும் பயப்பட வேண்டாம் வாட்ஸ்அப் எந்த  காரணத்திற்காகவும் உங்களுடைய தகவல்களை திருடாது என்று வாட்ஸ்அப் நிறுவனம் ஏழு வரிகளில் தற்போது விளக்கம் அளித்துள்ளது.

வாட்ஸ்அப் நிறுவனம் சமீபத்தில் அறிவித்த பிரைவசி பாலிசி கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் புதிய பாதுகாப்பு கொள்கைகள் கட்டாயமாக ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் இல்லையென்றால் வாட்ஸ் அப் செயலியை பயன்படுத்த முடியாத சூழ்நிலை ஏற்படும் என்று வாட்ஸ்அப் கூறியிருந்தது.

வாட்ஸ் அப் அறிமுகம் செய்திருக்கும் இந்த புதிய பிரைவசி பாலிசியின் முக்கியக் குறிக்கோளை பேஸ்புக் நிறுவனத்துடன் வாட்ஸ்அப் பயனாளிகளின் தகவல்களை ஷேர் செய்வதுதான்.


இதுநாள் வரைக்கும் வாட்ஸ் அப் செயலியில் பகிரும் தகவல்கள் அனைத்தும் பாதுகாப்பாக இருக்கும் என்று பலரும் பயன்படுத்தி வந்த நிலையில் இது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதன் காரணமாக வாட்ஸ்அப் செயலியை தங்களுடைய மொபைலில் இருந்து நீக்கிவிட்டு அதற்கு மாற்றாக பல்வேறு செயலிகளை பயனாளர்கள் பதிவிறக்கம் செய்து  பயன்படுத்தத் துவங்கினர்.இதற்கு தற்போது வாட்ஸ்அப் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.  

வாட்ஸ் அப் அளித்த 7 வரி விளக்கம் :

  1. வாட்ஸ்அப் மற்றும் பேஸ்புக் பயனர் அனுப்பும் தனிப்பட்ட குறுந்தகவல்களை பார்க்கவோ அல்லது அழைப்புகளை கேட்கவோ செய்யாது.
  2. நீங்கள் யாருக்கு மெசேஜ் செய்கிறீர்கள், யாருக்கு கால் செய்கிறீர்கள் என்கிற தகவலை வாட்ஸ்அப் சேகரிக்காது.
  3. வாட்ஸ்அப் மற்றும் பேஸ்புக் பயனர் பகிர்ந்து கொள்ளும் லொகேஷனை பார்க்க முடியாது.
  4. வாட்ஸ்அப் உங்கள் தொடர்புகளை பேஸ்புக்கிடம் பகிராது.கொள்ளாது.
  5.  வாட்ஸ்அப் குரூப்கள் தொடர்ந்து தனியாகவே செயல்படும்.
  6.  குறுந்தகவல் மறைந்து போக செய்யும் வசதி வழங்கப்படுகிறது.
  7.  உங்கள் டேட்டாவை நீங்கள் டவுன்லோட் செய்ய முடியும்.