இந்தியாவில் மூன்றாவது பெரிய ஸ்மார்ட்போன் பிராண்ட் ஆக உயர்ந்தது போகோ !

ஒன் பிளஸ் மற்றும் ரியல்மி நிறுவனங்களை பின்னுக்குத்தள்ளி போகோ  நிறுவனம் இந்தியாவில் மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இதைப் பற்றிய தகவல்களை விரிவாக பார்க்கலாம்.

சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான சியோமியின் துணை பிராண்ட் போகோ ஒன்ப்ளஸ் மற்றும் ரியல்மி நிறுவனத்தை முந்தியுள்ளது. சமீபத்தில் வெளியாகி இருக்கும் நவம்பர் மாதத்திற்கான கவுண்டர் பாயிண்ட் அறிக்கையின்படி இந்தியாவில் போகோ நிறுவனம் மூன்றாவது இடத்தில் இருப்பதாக தெரியவந்துள்ளது.போகோ நிறுவனத்தின் போகோ சி 3 மற்றும் போக்கோ எம் 2 ஆகியவை இந்த வளர்ச்சியின் முக்கிய காரணங்களாக இருந்தன ”என்று கவுண்டர் பாயிண்டின் ஆராய்ச்சி ஆய்வாளர் ஷில்பி ஜெயின் கூறினார்

இதைப் பற்றி கருத்து கூறிய போகோ இந்தியா நிறுவனத்தின் இயக்குனர் அனுஜ் சர்மா “ எங்கள் நிறுவனம் ஆரம்பித்து 10 மாதத்திற்குள் நாங்கள் இந்திய சந்தையில் மூன்றாவது இடத்தை பெற்றுள்ளோம், மேலும் பிளிப்கார்ட்டில் பிக் பில்லியன் நாள் விற்பனையின் முதல் வாரத்திற்குள் 1 மில்லியனுக்கும் அதிகமான யூனிட்டுகளை விற்றோம்” என்று கூறியுள்ளார்.