வாட்ஸ்அப் நிறுவனம் WhatsApp Web-ல் ஆடியோ / வீடியோ காலிங் அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது இதன் முழு விபரங்களை பார்க்கலாம்..
வாட்ஸ்-அப் செயலியில் பல்வேறு புதிய அம்சங்கள் தொடர்ந்து வாட்ஸ்அப் நிறுவனம் அறிமுகம் செய்து வருகிறது. இதன் காரணமாக மொபைல் போனில் வாட்ஸ் அப் செயலியை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.
வாட்ஸ் அப் செயலியில் வீடியோ மற்றும் ஆடியோ காலிங் அம்சம் இருக்கின்றது ஆனால் WhatsApp Web-ல் ஆடியோ / வீடியோ காலிங் அம்சம் இதுவரைக்கும் இல்லாமல் இருந்தது. தற்போது வாட்ஸ்அப் நிறுவனம் வாட்ஸ்அப் வெப் பயனர்களுக்கு வாய்ஸ் மற்றும் வீடியோ கால் வசதியை வழங்கியுள்ளது.
இதன் மூலம் பயனர்கள் டெஸ்க்டாப் மூலமாக வாட்ஸ்அப் அழைப்புகளை மேற்கொள்ளலாம். தற்போது இந்த புதிய அம்சம் சோதனை அடிப்படையில் இருக்கின்றது மிக விரைவில் அனைத்து பயனர்களுக்கும் வழங்கப்பட இருக்கின்றது.
WhatsApp Beta Calls available on WhatsApp Web/Desktop#WhatsApp #WhatsAppweb pic.twitter.com/CNdKmQ59aQ
— Red Tech Tamizha (@Redtechtamizha) December 21, 2020