23 மில்லியன் ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் ஒரே மாதத்தில் விற்பனை !

இந்தியாவில் ஒரே மாதத்தில் 23 மில்லியன் ஸ்மார்ட் போன்கள் விற்பனையாகியுள்ளது என்று சமீபத்தில் ஒரு அறிக்கை தெரிவிக்கின்றது. இதைப் பற்றிய முழுமையான தகவல்களை பார்க்கலாம்…

வழக்கத்தைக் காட்டிலும் இந்த 2020ஆம் ஆண்டில்  ஸ்மார்ட் போன் விற்பனை இந்திய சந்தையில் களைகட்டியது. சமீபத்தில் வெளியாகிய சர்வதேச தரவுக் கழகம் (IDC) அறிக்கையின் படி அக்டோபர் மாதத்தில் 23 மில்லியன் ஸ்மார்ட் போன்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

அக்டோபர் மாத ஸ்மார்ட்போன் விற்பனை பொறுத்தவரையில், 24.8% பங்குகளுடன் சியோமி  முதலிடத்திலும், 20.6%  பங்குகளுடன் சாம்சங் இரண்டாம் இடத்திலும் அதனைத் தொடர்ந்து விவோ, ரியல்மி  மற்றும் ஒப்போவும் இருக்கின்றது. நகர அளவில், அக்டோபர் மாதத்தில் 22 மில்லியன் ஸ்மார்ட்போன்கள் விற்பனையானது

2020ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் ஸ்மார்ட் போன் விற்பனை 42 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது என்று IDC ஆய்வின் முடிவுகள் கூறுகிறது.