விரைவில் இந்தியாவில் NOKIA AC அறிமுகம் செய்யப்படுகிறது ? என்ன விலை ?

நோக்கிய நிறுவனம் விரைவில் இந்திய சந்தையில் ஏர் கண்டிஷன ஒன்றை விரைவில் அறிமுகம் செய்கின்றார்கள் இதன் விலை மற்றும் எப்பொழுது விற்பனை செய்யப்படுகிறது என்பதைப் பற்றி விரிவாக பார்க்கலாம்…

நோக்கியா நிறுவனம் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட  ஏர் கண்டிஷனர் ஒன்றை வருகிற டிசம்பர் 29 ஆம் தேதி அறிமுகம் செய்யப்போவதாக அறிவித்துள்ளது. இந்த ஏர் கண்டிஷனர் பிளிப்கார்ட் தளம் மூலமாக விற்பனைக்கு வர இருக்கிறது. 

ஏற்கனவே இந்திய சந்தையில் நோக்கியா நிறுவனம்  மொபைல்கள், மடிக்கணினிகள் மற்றும் டிவிக்களை அறிமுகம் செய்து வருகிறது  தற்போது இந்தியாவில் நோக்கியா நிறுவனம் ஏர் கண்டிஷனர் சந்தையிலும் கால் பதித்துள்ளது.

நோக்கியா நிறுவனம் வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பின் படி,  இந்த நோக்கியா ஏர் கண்டிஷனர்கள் இந்தியாவில் வடிவமைக்கப்பட்டுள்ளன  என தெரிகிறது. மேலும் இதன் விலை இந்தியாவில் ரூ.30,999 என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நோக்கிய ஸ்மார்ட் ஏசிகள் ஆனது வருகிற டிசம்பர் 29, 2020 முதல் பிளிப்கார்ட் தளம் வழியாக விற்பனைக்கு வருகின்றது.