Whatsapp வாய்ஸ் & வீடியோ கால் இனிமே Whatsapp Web வழியாக செய்யலாம் !

நீண்ட எதிர்பார்ப்புக்கு பின்பு வாட்ஸ் அப் Web வழியாக வாய்ஸ் & வீடியோ கால் செய்யும் வசதியை வாட்ஸ்அப் அறிமுகம் செய்துள்ளார்கள்.

பேஸ்புக் நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்அப் நிறுவனம் தொடர்ந்து பல்வேறு புதிய அம்சங்களை அறிமுகம் செய்து வருகிறது. வாட்ஸ்-அப் செயலியில் வாய்ஸ் & வீடியோ கால் செய்யும் வசதி இருந்தாலும், Whatsapp Web வழியாக வாய்ஸ் & வீடியோ கால் செய்யும் வசதி இல்லாமல் இருந்தது.

கடந்த ஆண்டு டிசம்பரில், வாட்ஸ்அப் அதன் தேர்ந்தெடுக்கப்பட்ட பயனர்களுக்கு மட்டுமே டெஸ்க்டாப் ஆப்பிலிருந்து வாய்ஸ் மற்றும் வீடியோ அழைப்பு அம்சத்தினை வெளியிடத் தொடங்கியது.அதைத் தொடர்ந்து தற்போது அனைத்து பயனர்களுக்கும் வாட்ஸ்அப் இந்த வசதியை வழங்கியுள்ளது.


இப்பொழுது  மொபைல் போனில் எப்படி வாட்ஸ்அப் பயன்படுத்தி வாய்ஸ் மற்றும் வீடியோ கால் செய்வார்களோ அதேபோன்று டெஸ்க்டாப் கணினிகளை பயன்படுத்தி வீடியோ மற்றும் வாய்ஸ் கால்களை செய்யும் முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.