Realme GT 5G ஸ்மார்ட்போன் அறிமுகம் !

ரியல்மி நிறுவனம் சீனாவில் Realme GT 5G என்கின்ற மொபைலை அறிமுகம் செய்துள்ளார்கள் இதன் விலை மற்றும் சிறப்பம்சங்கள் பற்றி விரிவாக பார்க்கலாம்..

ரியல்மி நிறுவனம் 2021 ஆம் ஆண்டில் Realme GT 5G என்கின்ற முதல் பிளாக்ஷிப் மொபைலை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது. இது குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 SoC மூலம் இயங்குகிறது மற்றும் 120 ஹெர்ட்ஸ் அமோலேட் டிஸ்ப்ளே, 64 எம்பி முதன்மை கேமரா சென்சார் கொண்ட ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பு போன்ற பல்வேறு சிறப்பம்சங்கள் இந்த மொபைலில் உள்ளது.

Realme GT 5G ஸ்மார்ட்போன் ஆனது 65W ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 4,500 எம்ஏஎச் பேட்டரியை பேக் செய்கிறது. இந்த ஸ்மார்ட்போன் பிரீமியம் வடிவமைப்பு மற்றும் நீலம், வெள்ளி மற்றும் ரேசிங் மஞ்சள் வண்ண விருப்பங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

Realme GT 5G ஸ்மார்ட்போனின் விலை :

Realme GT 5G ஸ்மார்ட்போனின் 8 ஜிபி + 128 ஜிபி மாடலுக்கு CNY 2,799 (தோராயமாக ரூ .31,400) மற்றும் 12 ஜிபி + 256 ஜிபி வேரியண்டிற்கு CNY  3,299 (தோராயமாக ரூ. 37,000)இதற்கும் விற்பனைக்கு வந்துள்ளது.

MODELPRICE
Realme GT 8GB+128GBCNY 2,799
 (approx Rs 31,400)
Realme GT 12GB+256GBCNY 3,299
(approx Rs 37,000)

இந்த மொபைல் மார்ச் 10ஆம் தேதி முதல் விற்பனைக்கு வருகிறது மேலும் இந்த மொபைல் உலகச் சந்தையில் மிக விரைவில் அறிமுகம் செய்யப்படும் என்று நிறுவனம் தரப்பில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

Realme GT 5G – Full phone specifications

Launch Date04 March 2021 (China)
Display6.43-inch FHD+ Super AMOLED display 
Refresh rate120Hz
Weight186 g
ColorsGold/Black, Blue, Silver
SIMDual SIM (Nano-SIM, dual stand-by)
SD Slot
Rear camera64MP primary sensor,
8MP wide-angle lens,
2MP macro lens.
Video(Rear)4K@30/60fps, 1080p@30/60/240fps,
Front camera16MP
Video(Rear)1080p@30fps
Fingerprint sensorIn-display fingerprint sensor
ChipsetQualcomm Snapdragon 888 5G SoC
GPUAdreno 660
OSAndroid 11
UIRealme UI 2.0
BATTERY4,500mAh battery
Charging65W fast charging