விவோ நிறுவனம் விவோ Y20 (2021) என்கின்ற மொபைலை அறிமுகம் செய்துள்ளார்கள். இதன் விலை மற்றும் சிறப்பம்சங்கள் பற்றி பார்க்கலாம் ..
பட்ஜெட் விலையில் விவோ நிறுவனம் விவோ Y20 (2021) என்கின்ற மொபைலை மலேசிய நாட்டில் அறிமுகம் செய்துள்ளார்கள். இந்த மொபைல் முன்னதாக அறிமுகப்படுத்தப்பட்ட விவோ ஒய் 20 ஸ்மார்ட்போனின் புதுப்பிக்கப்பட்ட எடிஷன் ஆகும். விவோ ஒய் 20 (2021) டிரிபிள் ரியர் கேமரா அமைப்பு, MediaTek Helio P35 மற்றும் 5,000 எம்ஏஎச் பேட்டரி போன்ற அம்சங்களுடன் வருகிறது.
இந்த மொபைல் Dawn White மற்றும் Nebula Blue ஆகிய இரண்டு வண்ண விருப்பங்களில் வெளியாகியுள்ளது.
புகைப்படம் எடுப்பதற்கு பின்புறத்தில் 13 மெகாபிக்சல் முதன்மை சென்சார் , 2 மெகாபிக்சல் இரண்டாம் நிலை கேமரா , 2 மெகாபிக்சல் மூன்றாம் நிலை கேமரா ஆகியவைகள் உள்ளன. முன்பக்கத்தை பொறுத்தவரை, 8 மெகாபிக்சல் செல்பீ கேமரா கொடுக்கப்பட்டுள்ளது.
விவோ ஒய் 20 (2021) ஸ்மார்ட்போனின் மலேசியா விலை:
மலேசியாவில் விவோ Y20 (2021) மொபைல் இந்திய மதிப்பின்படி தோராயமாக ரூ.10,900($148) என்கிற விலைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.