இரண்டு சாம்சங் கேலக்ஸி மொபைல்களுக்கு விலை குறைப்பு .!!

சாம்சங் நிறுவனத்தின் சாம்சங் கேலக்ஸி எம் 01, கேலக்ஸி எம் 01 எஸ் ஆகிய இரண்டு ஸ்மார்ட் போனின் விலை இந்தியாவில் குறைக்கப்பட்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி எம் 01, கேலக்ஸி எம் 01 எஸ் ஆகிய ஸ்மார்ட்போன்களுக்கு விலை குறைப்பு செய்யப்பட்டுள்ளது. இந்த இரு மொபைல்களும் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் சந்தைகளில் வாங்க கிடைக்கின்றது.


சாம்சங் கேலக்ஸி எம் 01 ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.7,999-ஆக இருந்தது, தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.7,499-விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல் சாம்சங் கேலக்ஸி எம் 01 எஸ் ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.9,499-ஆக இருந்தது, தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.8,999-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.