Twitter going the Snapchat,Instagram way, testing tweets that disappear after 24 hours
சமூக வலைத்தளமான ட்விட்டர் (Twitter) தற்போது ஒரு புதிய அம்சத்தை அறிமுகம் செய்ய இருக்கின்றது. இதைப்பற்றின அறிவிப்பை அதிகாரபூர்வமாக ட்விட்டர் நிறுவனம் அறிவித்தார்கள். இதன் காரணமாக ட்விட்டர் பயன்படுத்தும் பயனாளர்கள் #RIPTwitter என்ற HasTag-ஐ டிரெண்டிங் செய்து வருகிறார்கள்.
Snapchat மற்றும் Instagram ஸ்டோரீஸ் தானாகவே மறைந்துவிடும் அம்சம் இருக்கின்றது அதேபோல் தற்போது ட்விட்டர் நிறுவனமும் ட்வீட்டுகள் அல்லது ஸ்டோரீஸ் 24 மணி நேரத்திற்குப் பிறகு தானாக மறைந்துவிடும் அம்சத்தை அறிமுகம் செய்ய இருக்கின்றார்கள்.
தற்போது இந்த புதிய அம்சம் லத்தீன் அமெரிக்க நாடான பிரேசிலில் மட்டுமே சோதனை செய்யப்படுகிறது. இந்தப் புதிய அம்சத்திற்கு பல்வேறு பயனாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றார்கள்.