How to transfer images/Videos from Facebook to Google Photos
பெரும்பாலான மக்கள் பேஸ்புக் சமூக வலைத்தளத்தை அதிகம் பயன்படுத்துகிறார்கள். இந்நிலையில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை ஃபேஸ்புக்கில் அதிக அளவில் பதிவேற்றி வருகிறார்கள். தற்போது ஃபேஸ்புக் நிறுவனம் ஃபேஸ்புக்கில் பதிவேற்றும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை கூகுள் புகைப்படங்களுடன் மாற்றுவதற்கான அம்சத்தை அறிமுகம் செய்துள்ளார்கள்.
எப்படி மாற்றம் செய்ய வேண்டும் ?
பயனாளர்கள் தங்களுடைய பேஸ்புக் கணக்கை Login செய்து, செட்டிங்ஸ் வழியாக Your Facebook Information மெனுவிற்குள் சென்று, Transfer a Copy of Your Photos or Videos என்ற விருப்பத்தைத் தேர்வு செய்யுங்கள். பின்பு Google Photos அதை தேர்வு செய்து Photos அல்லது video இரண்டில் ஒன்றை தேர்வு செய்து, இறுதியாக உங்களுடைய ஜிமெயில் அக்கவுண்டை தேர்வு செய்வதன் மூலம் பேஸ்புக் புகைப்படம் மற்றும் வீடியோக்களை Transfer செய்துகொள்ளலாம்.