100 கோடி ரூபாய் வழங்கியது டிக்டாக்!

Coronavirus in India:  TikTok has donated Rs100 crore worth of medical equipment to India

கொரோனா வைரஸ் நாடு முழுவதும் வேகமாக பரவி வருகிறது. இதன் காரணமாக இந்தியாவில் 23 நாள் ஊரடங்கு  உத்தரவை அரசு பிறப்பித்துள்ளது. தற்போது மத்திய அரசு கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து பாதுகாக்க, நிதி திரட்டி  வருகிறார்கள்.

பல்வேறு முக்கிய நபர்கள் பொதுமக்கள் மற்றும் முக்கிய நிறுவனங்கள் தங்களால் இயன்ற உதவியை மத்திய அரசுக்கு கொடுத்து வருகின்றார்கள். தற்போது டிக்டாக் நிறுவனமும் உதவி கரம் நீட்டி உள்ளார்கள்.

இந்தியாவில் உள்ள மருத்துவர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்களுக்கு ரூ.100 கோடி மதிப்புள்ள மருத்துவ உபகரணங்களான டிக் டாக் வழங்கப்போவதாக தெரிவித்துள்ளார்கள்.

மேலும் வரும் காலங்களில் சூழ்நிலைக்கு ஏற்றவாறு உதவி செய்வோம் என டிக் டாக் நிறுவனம் கூறியுள்ளது.