2021 ஆம் ஆண்டில் 108MP கேமரா கொண்ட அதிக ரெட்மி ஸ்மார்ட் போன்கள் அறிமுகம் செய்யப்படலாம் என்று ரெட்மி நிறுவனத்தின் பொது மேலாளர் சூசகமாக தெரிவித்துள்ளார்.
சியோமியின் ரெட்மி தனது முதல் 108MP கேமரா சென்சார் கொண்ட ரெட்மி நோட் 9 புரோ 5G மொபைலை சில மாதங்களுக்கு முன்பு அறிமுகம் செய்திருந்தது. இந்த மொபைல் இந்திய சந்தையில் Mi 10i என்கின்ற பெயரில் அறிமுகமானது.
இப்போது, 108 எம்.பி கேமராக்கள் கொண்ட கூடுதல் தயாரிப்புகளைப் பார்ப்போம் என்று ரெட்மி நிறுவனத்தின் பொது மேலாளர் லு வெய்பிங்( Lu Weibing) தெரிவித்துள்ளது.
ரெட்மி k40 தொடரை இந்த மாதம் சீனாவில் அறிமுகம் செய்ய நிறுவனம் தயாராகி வருகிறது. ரெட்மி கே 40 தொடர் சாதனங்களைத் தவிர, இந்த ஆண்டின் அறிமுகம் செய்ய இருக்கும் நோட் 10 சீரிஸ் சாதனத்துடன் 108 எம்.பி கேமரா அமைப்பை மீண்டும் காணலாம் என்று நம்புகிறோம்..
More Xiaomi phones with 108MP primary camera to launch this year.
— Red Tech Tamizha (RTT24x7.com) (@Redtechtamizha) February 1, 2021
Redmi GM Hints at Multiple Smartphones With 108MP Cameras to Launch This Year pic.twitter.com/XIJ9sSbZFQ