இலவச லேண்ட்லைன் சேவையை விரைவில் கொண்டுவரவுள்ளது டாடா ஸ்கை

Tata Sky to offer free unlimited landline connection

லேண்ட்லைன் என்றாலே பிஎஸ்என்எல் தான் பலருக்கும் ஞாபகம் வரும். ஆனால் தற்போது பல்வேறு நிறுவனங்கள் போட்டி போட்டு பிராட்பேண்ட் இணைப்புகளை மக்களுக்குக் கொடுத்து வருகின்றார்கள்.

இதிலும் சில நிறுவனங்கள் தங்களுடைய பிராட்பேண்ட் இணைப்பு வாங்கினால் லேண்ட்லைன் இணைப்பு இலவசமாக வழங்கப்படும் அது மட்டும் அல்லாமல் அனைத்து அழைப்புகளும் இலவசமாக செய்யலாம் என்பது போன்ற அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்கள்.

அந்த வரிசையில் தற்போது டாட்டா ஸ்கை நிறுவனமும் இணைந்துள்ளது. டாடா ஸ்கை பிராட்பேண்ட் வாடிக்கையாளர்களுக்கு இலவச லேண்ட்லைன் சேவையை விரைவில் கொண்டுவரவுள்ளது.

இந்த திட்டம் மூலமாக புதிய வாடிக்கையாளர்களை ஈர்க்க டாடா ஸ்கை திட்டமிட்டுள்ளது.