Coronavirus: Digital industry defaults HD content streaming to SD
கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இணைய பயன்பாடு அதிகரித்துள்ளது. அதிலும் பெரும்பாலான பயனாளர்கள் டிஜிட்டல் தளங்களேயே அதிகம் விரும்பிப் பார்க்கிறார்கள்.
இதன் காரணமாக மத்திய அரசு மற்றும் டெலிகாம் துறை இணைந்த ஒரு முடிவு எடுத்துள்ளது. அனைத்து மக்களுக்கும் சேவை தடையின்றி கிடைக்க வருகிற ஏப்ரல் 14-ம் தேதி வரையில் HD மற்றும் அல்ட்ரா HD தரத்திலான வீடியோக்கள் வழங்கப்பட மாட்டாது. மாறாக SD தரத்திலான வீடியோக்கள் மட்டுமே பயனாளர்களுக்கு வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்கள்.