ரெட்மி நோட் 10 மொபைலின் முதல் விற்பனையை கிண்டல் செய்த ரியல்மி !

சமீபத்தில் அறிமுகம் செய்து இருந்த ரெட்மி நோட் 10 மொபைல் இன்று முதல் முறையாக விற்பனைக்கு வந்தது. இந்த மொபைலுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்ததால் இன்று நண்பகல் 12 மணிக்கு அதிகமான நபர்கள் வாங்க முயற்சி செய்தார்கள்.

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 4 ஜிபி + 64 ஜிபி மாடல் இன்று விற்பனைக்கு வரவில்லை. இந்த மாடலின் விலை ரூ .11,999. இதை தற்போது ரெட்மி நிறுவனத்திற்கு போட்டியாக கருதப்படும் ரியல்மி  நிறுவனம் மறைமுகமாக கிண்டல் செய்துள்ளது.

Also Read : ரெட்மி மொபைலுக்கு 2000 ரூபாய் வரை தள்ளுபடி !

ரெட்மி நோட் 10 முதல் விற்பனையின் போது என்ன நடந்தது?

மார்ச் 16 நன்பகல் 12 மணிக்கு மி இந்தியா வலைத்தளம் மற்றும் அமேசான் வலைத்தளம் மூலமாக விற்பனை துவங்கியது ஒரு யூனிட் வாங்குவதற்கு ஏராளமான வாடிக்கையாளர்கள் இணையதளத்திற்கு வந்ததால் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது அதன் பிறகு ரெட்மி நோட் 10 மொபைலின் 6 ஜிபி + 128 ஜிபி வேரியண்ட் மட்டுமே இன்று ரூ .13,999 க்கு விற்பனைக்கு வந்தது.

எந்த காரணத்திற்காக ரெட் மி நோட் 10 மொபைலின் 4 ஜிபி + 64 ஜிபி மாடல் இன்று விற்பனைக்கு வரவில்லை என்று தெரியவில்லை. 

ரெட்மி நோட் 10 முதல் விற்பனை பற்றி ரியல்மி என்ன கூறியது ?

ரியல்மி இந்தியாவின் CEO மாதவ் ஷெத் Realme 8 Pro மொபைலின் புகைப்படத்தை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அதை Re-Tweet செய்த ரியல்மி இந்தியாவின் மற்றொரு CEO பிரான்சிஸ் வாங் “ எங்களிடம் குறைந்த மாறுபாடு உள்ளது, இதன் மூலம், நான் என்ன சொல்கிறேன் என்று உங்களுக்குத் தெரிகிறதா” என்று கூறியிருக்கிறார்.

இதன்மூலமாக ரெட்மி நோட் 10 மொபைலின் முதல் விற்பனையில் குறைந்த மாறுபாடு உள்ள 4 ஜிபி + 64 ஜிபி மாடல் மொபைல் இன்று விற்பனைக்கு வராததை  மறைமுகமாக கிண்டல் செய்துள்ளார்.