Swiggy Grocery Online – Swiggy Grocery Feature Launched in 125 Cities in India
கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக, மக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கிக்கிடக்கின்றனர். மேலும் அத்தியாவசிய தேவையான மருந்துகள் மற்றும் மளிகை பொருட்கள் வாங்குவதற்கான நேரமும் குறிக்கப்பட்டது.
இந்நிலையில் இந்தியாவின் 125-க்கும் மேற்பட்ட நகரங்களில் ஸ்விக்கி புதிய மளிகை விநியோக சேவையைத் தொடங்கியுள்ளது. இந்த சேவை மூலமாக இரண்டு மணி நேரத்தில் மளிகை பொருட்களை டெலிவரி செய்யும் என்று ஸ்விக்கி கூறுகிறது.