ட்ரோன் மூலம் பான் மசாலா விற்பனை ? இருவர் கைது

Coronavirus lockdown: ‘Pan Masala’ sale via drone

கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு  அமல்படுத்தப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்கள் தவிர  மற்ற பொருட்களை விற்க அரசு தடை விதித்துள்ளது.

குறிப்பாக போதைப்பொருட்கள் மது மற்றும் பான்மசாலா போன்றவைகளை விற்கவும் அரசுகள் தடை விதித்துள்ளது. இந்நிலையில், குஜராத்தில் மோர்பி பகுதியில் உள்ள வீடுகளில் ட்ரோன் மூலம் பான் மசாலா விற்பனை செய்யப்பட்டுள்ளது.

இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவியது. இதைத் தொடர்ந்து ட்ரோன் ஆப்ரேட்டர் உட்பட இருவரை போலீசார் கைதுசெய்தனர்.