ஏடிஎம் இயந்திரத்தில் இலவச அரிசி !

‘Rice ATM’ feeds Vietnam’s poor amid virus lockdown

கொரோனா வைரஸ் காரணமாக பெரும்பான்மையான நாடுகள் கடும் நெருக்கடியை சந்தித்துள்ளது. இந்த சூழ்நிலையில் மக்களுக்கு மிக அத்தியாவசியமான பொருள் அரிசி என்று கூறலாம். இதுவரைக்கும் பணம் மட்டும் எடுக்க அதிக அளவில் பயன்படுத்த ஏடிஎம் இயந்திரம் தற்போது அரிசியும் எடுக்க உதவுகின்றது, இந்தத் தொழில்நுட்பம் பற்றி இப்பதிவில் பார்க்கலாம். 

வியட்நாமில் நாட்டில் வணிகர்கள் மற்றும் நன்கொடையாளர்கள் உதவியுடன் பல நகரங்களில் இலவச அரிசியை விநியோகிக்கும் ஏடிஎம் இயந்திரங்களை அமைத்துள்ளனர்.

இதுபோன்று புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மக்களுக்கு உதவி செய்யும் இதுபோன்ற செயல்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.