EMI செலுத்த தேவையில்லை ? OTP சொல்லுங்க ? பணம் திருட்டு போகும் அபாயம்

SBI says EMI deferment does not require OTP

கொரோனா பாதிப்பு காரணமாக 21 நாள் ஊரடங்கு  உத்தரவை அரசு பிறப்பித்துள்ளது. இந்த பாதிப்பு காரணமாக  வங்கிகள் 3 மாத வங்கிக் இஎம்ஐ-கள் தள்ளிப்போட பட்டுள்ளது. இதை பயன்படுத்தி சைபர் கொள்ளையர்கள் நூதன திருட்டில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்த நூதன மோசடி எப்படி நடைபெறுகிறது ?

நாங்கள் வங்கியிலிருந்து பேசுகிறோம் என்ற வாடிக்கையாளர்களுக்கு ஒரு அழைப்பு வருகிறது. உங்களுடைய இஎம்ஐ-ஐ தள்ளி போட வேண்டும் என்றால் தங்கள் எண்ணுக்கு வரும் OTP எங்களை கூறுங்கள் என கூறுகிறார்கள். OTP  கூறும் வாடிக்கையாளர்களின் வங்கி கணக்கில் உள்ள பணத்தை இதன் மூலமாக எளிதில் திருடி விடுகின்றார்கள். 

இந்த தகவலை, ரயில்வே துறையில் ஐஜியாகவும் முன்னாள் சிறைத்துறை டிஐஜி பணிபுரிந்து வந்த ரூபா ஐபிஎஸ், தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கி விளக்கம் ?

இஎம்ஐ-ஐ தள்ளி போட வேண்டும் என்றால் தங்கள் எண்ணுக்கு வரும் OTP எங்களை கூறுங்கள்  என்று வங்கியில் இருந்து எந்த ஒரு அழைப்புகளும் வாடிக்கையாளர்களுக்கு செய்ய மாட்டோம்.

இவ்வாறு உங்களுக்கு அழைப்பு வந்தால் உங்களுடைய OTP என்னை தயவு செய்து அவர்களுக்கு கொடுக்க வேண்டாம் என எச்சரித்துள்ளார்.