வாட்ஸ்அப் அதிரடி! ஒருவருக்கு மேல் ஒரு செய்தியை அனுப்ப தடை

WhatsApp puts new limits on the forwarding of viral messages

கொரோனா பாதிப்பு காரணமாக 21 நாள் ஊரடங்கு  உத்தரவை அரசு பிறப்பித்துள்ளது. இதன் காரணமாக வாட்ஸ் அப் அப்ளிகேஷன் பயன்பாடு அதிகரித்துள்ளது.

இதன் காரணமாக சமீபத்தில் வாட்ஸ் அப் நிறுவனம்  30 வினாடி இருந்த வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் அளவை 15 வினாடிகளுக்கு குறைத்தார்கள். கொரோனா  வைரஸ் தொற்று தொடர்பான வதந்திகள் பரப்பப்படுவதைத் தடுக்க மேலும் சில கட்டுப்பாடுகளை வாட்ஸ்அப் கொண்டு வந்துள்ளார்கள்.

இனிமேல் ஒரு நேரத்தில் ஒரு சாட்டிற்கு மட்டுமே பார்வேட் மெசேஜை அனுப்ப முடியும் என்கிற கட்டுப்பாட்டை அறிவித்துள்ளது.ஏற்கனவே பார்வேட் மெசேஜை 5 பேருக்கு மட்டுமே அனுப்பலாம் என்று இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.