சாம்சங் நிறுவனம் பட்ஜெட் விலையில் சாம்சங் கேலக்ஸி M12 என்கின்ற மொபைலை வருகிற மார்ச் 11ஆம் தேதி இந்திய சந்தையில் அறிமுகம் செய்கின்றது. குறிப்பாக இந்த மொபைல் பட்ஜெட் விலையில் அதிக சிறப்பம்சங்களுடன் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஸ்மார்ட்போன் முதன்முதலில் வியட்நாமில் கடந்த மாத தொடக்கத்தில் அறிமுகம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் பிரபல E-commerce இணையதளமான அமேசன் வழியாக விற்பனைக்கு வரும் என்று தெரிகிறது.
மேலும் இந்த ஸ்மார்ட்போனில் 6.5 இன்ச் அளவிலான டிஸ்ப்ளே, எக்ஸிநோஸ் 850 எஸ்ஒசி சிப்செட், 6,000 எம்ஏஎச் பேட்டரி, 48 எம்பி குவாட் கேமரா போன்ற பல்வேறு சிறப்பம்சங்கள் இந்த மொபைலில் இருக்கின்றது இந்த மொபைல் இந்தியாவில் 12 ஆயிரம் ரூபாய்க்கு கீழ் அறிமுகம் செய்வார்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றது.