குறைவான விலையில் 108MP கேமரா ! Realme 8 Series பற்றி வெளியான புதிய தகவல் !

ரியல்மி மிக விரைவில் இந்திய சந்தையில் 108 மெகாபிக்சல் கேமரா உள்ள ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

ரியல்மி நிறுவனம் 2020ஆம் ஆண்டு தொடர்ந்து பல்வேறு ஸ்மார்ட்போன்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து முன்னணி ஸ்மார்ட்போன் பிராண்டாக முன்னேறியது. அதைத்தொடர்ந்து 2021 ஆம் ஆண்டு 5ஜி ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்வதில் தற்போது ஆர்வம் காட்டி வருகின்றார்கள்.

அந்த வகையில் சமீபத்தில் Realme Narzo 30 Pro 5G என்கின்ற மொபைலை அறிமுகம் செய்திருந்தார்கள். அதைத்தொடர்ந்து மிக விரைவில் இந்தியாவில் 108MP கேமரா கொண்ட ஸ்மார்ட் போனை அறிமுகம் செய்ய ரியல்மி திட்டமிட்டிருக்கின்றது.

ரியல்மி கடந்த 2020ஆம் ஆண்டில் இந்தியாவில் ரியல்மி  6 தொடர் மற்றும் ரியல்மி  7 தொடர்களை அறிமுகம் செய்திருந்தது.  தற்போது ரியல்மி  8 தொடர் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய ரியல்மி தீவிரம் காட்டி வருகின்றார்கள்.

ரியல்மி நிறுவனத்திற்கு போட்டியாக இருக்கும் ரெட்மி நிறுவனம் மார்ச் 4ஆம் தேதி இந்தியாவில் Redmi Note 10 series மொபைல்களை அறிமுகம் செய்கின்றது. இதையொட்டி ரியல்மி நிறுவனமும் 108MP கேமரா உள்ள ஸ்மார்ட் போனை மிக விரைவில் அறிமுகம் செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளது. 

இதை வைத்து பார்க்கும்போது ரியல்மி 8 தொடர் ஸ்மார்ட்போன்களில் ரியல்மி 108 மெகாபிக்சல் கேமராவை அறிமுகம் செய்வார்கள் என்று யூகிக்க முடிகின்றது. இந்த ஸ்மார்ட்போன்கள் 20,000 ரூபாய்க்கு கீழ் அறிமுகம் செய்வார்கள் என்று எதிர்பார்க்கலாம்.