Samsung Galaxy M31s மொபைலின் விலை இந்தியாவில் குறைந்தது !

சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எம்31எஸ் ஸ்மார்ட்போனின் விலை இந்தியாவில் குறைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி  எம்31எஸ் ஸ்பார்க்போனுக்கு திடீரென்று  ரூ.1000 குறைக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் கடந்த ஜூலை மாதம் இந்தியாவில் ரூ. 19,499 துவக்க விலையில் அறிமுகம் செய்யப்பட்டது. . இந்த மொபைல் ஏற்கனவே கடந்த 2020ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் அறிமுகம் செய்யப்பட்ட  Samsung Galaxy M31 ஸ்மார்ட்போனின் மேம்பட்ட வேரியண்ட் என்பது குறிப்பிடத்தக்கது.

விலை குறைப்புக்கு பின் சாம்சங் கேலக்ஸி எம்31எஸ் 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி ஸ்மார்ட்போன் தற்போது ரூ. 18,499க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது மேலும் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி வேரியண்ட் ரூ. 20,499 க்கு விற்பனை செய்யப்படுகிறது .  இந்த .விலை குறைப்பு அமேசான், சாம்சங் இந்தியா அதிகாரப்பூர்வ வலைதளங்களில் பிரதிபலிக்கின்றது.

சாம்சங் கேலக்ஸி எம்31எஸ் விலை :

RamInternal StoragePriceBuy
6 GB128 GB18,499amazon
8 GB128 GB20,499amazon