Samsung Galaxy M31 மொபைல் இந்தியாவில் பிப்ரவரி 25-ல் வெளியாகிறது

Samsung Galaxy M31 Update : Samsung Galaxy M31 to Launch in India on February 25

Samsung நிறுவனம் தன்னுடைய Galaxy M-சீரிஸ் ஸ்மார்ட் போன் வரிசையில் Samsung Galaxy M31 என்கின்ற ஸ்மார்ட்போனை இந்தியாவில் பிப்ரவரி 25ல் அறிமுகம் செய்கின்றது.

இந்த Samsung Galaxy M31 ஸ்மார்ட்போனை ‘மெகா மான்ஸ்டர்’ என்று அழைக்கிறது Samsung. இந்த ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் இந்தியாவில் அறிமுகம் ஆகின்றது. இந்த ஸ்மார்ட்போனை பிப்ரவரி 25 மதியம் ஒரு மணிக்கு Samsung அறிமுகம் செய்கின்றது. இது Amazon மற்றும் சாம்சங் ஸ்டோரிலும் கிடைக்கும்.

இந்தியாவில் Samsung Galaxy M31-ன் விலை 6 GB Ram + 64 GB Storage கூடிய அடிப்படை மாடலின் விலை ரூ.15,999-யில் இருந்து தொடங்குகிறது. அதே சமயம், அதன் 6 GB Ram + 128 GB Storage ஸ்டோரேஜுடன் அறிவிக்கப்பட்ட இரண்டாவது வேரியண்டின் விலை அறியப்படவில்லை.

இந்த ஸ்மார்ட்போனில் இப்போது நமக்குத் தெரிந்த விஷயம் என்னவென்றால், 64 மெகா பிக்சல் கொண்ட குவாட் கேமரா அமைப்பைக் கொண்டிருக்கும், இது Full-HD+ Super-AMOLED Infinity-U Display மற்றும் 6,000mAh பேட்டரி கொண்டிருக்கும் என தெரியவந்துள்ளது.

இந்த ஸ்மார்ட்போனை பற்றின முழு விபரம் மொபைல் அறிமுகம் ஆகும் பிப்ரவரி 25ம் தேதி தெரியவரும்.