எந்த கட்டணமும் வசூலிக்கப்படாது டிராய் அதிரடி : New Update on Bulk SMS TRAI Regulation 2020

No more 50 paise charges on sms after daily limit : TRAI may do away with 50 paise tariff limit for messages sent after 100-messages per SIM limit

கடந்த 2012 ஆம் ஆண்டு தொல்லைதரும்” எஸ்எம்எஸ்களை கட்டுப்படுத்தும் விதமாக டிராய் ஒரு முக்கிய முடிவை எடுத்தது. அதாவது தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்களுடைய வாடிக்கையாளர்களுக்கு தினமும் 100 எஸ்எம்எஸ்கள் மட்டும்தான் இலவசமாக கொடுக்க வேண்டும் அதற்கு மேல் எஸ்எம்எஸ் அனுப்பும் வாடிக்கையாளர்களிடம் இருந்து கட்டணம் வசூலிக்க வேண்டும் என கூறினார்கள்.

இந்நிலையில் தினமும் 100 எஸ்எம்எஸ் அனுப்பிய பிறகு தொலைத்தொடர்பு நிறுவனங்கள் நம்மிடம் இருந்து ஒரு எஸ்எம்எஸ்-க்கும் 50 பைசா வசூல் செய்து வருகின்றார்கள்.

இப்போது இருக்கும் நவீன தொழில்நுட்ப முன்னேற்றத்தில் பலரும் மொபைல் போனில் உள்ள எஸ்எம்எஸ் வசதியை அதிகம் பயன்படுத்துவது இல்லை. இதன் காரணமாக ஏற்கனவே இருந்த கட்டுப்பாடுகளை டிராய் நீக்கியுள்ளது.

அதாவது இனிமேல் 100 எஸ்எம்எஸ்கள் என்கிற வரம்பு தீர்ந்த பின்னர் நீங்கள் அனுப்பும் ஒவ்வொரு எஸ்எம்எஸ்-க்கும் 50 பைசா என்கிற கட்டணம் வசூலிக்கப்பட்ட மாட்டாது என டிராய் அறிவித்துள்ளார்கள்.

விரைவில் இந்த திட்டம் நாடு முழுவதும் அமல் செய்யப்படும் என தெரிகிறது.