Samsung Galaxy M21 மார்ச் 16-ல் இந்தியாவில் அறிமுகமாகின்றது

Samsung Galaxy M21 Release Date, Price in India March 2020

பட்ஜெட் விலையில் இந்தியாவில் ரியல்மி மற்றும் ரெட்மி நிறுவனங்கள் போட்டி போட்டு பல்வேறு மொபைல்களை அறிமுகம் செய்து இந்திய சந்தையில் முன்னணியில் இருக்கிறார்கள். இந்த போட்டியை சமாளிக்க சாம்சங் நிறுவனம் கேலக்ஸி M Series ஸ்மார்ட்போன்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது.

அந்த வரிசையில் தற்போது கேலக்ஸி எம் 21-ஐ மார்ச் 16-ஆம் தேதி அறிமுகப்படுத்தத் தயாராகி வருகிறது. இந்த ஸ்மார்ட்போனில் பின்பக்கம் 3 கேமராவும், கூடுதலாக 6,000 எம்ஏஎச் பேட்டரி இருக்கும் என்று தெரிவித்துள்ளது.

மேலும் இந்த ஸ்மார்ட்போன் இரண்டு வேரியண்டுகளில் வரலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த ஸ்மார்ட்போன் Amazon இணையதளத்தில் விற்பனைக்கு வருவதாக தெரிகிறது.

ஏற்கனவே Galaxy M31-ஐ பிப்ரவரி 25-ஆம் தேதி ரூ.15,999 என்றஆரம்ப விலையில் அறிமுகம் செய்தார்கள். தற்போது அறிமுகம் செய்ய இருக்கும் கேலக்ஸி எம் 21 ரூபாய் 10,990க்கு அறிமுகம் ஆகலாம் என தெரிகிறது.