மலிவான விலையில் 5ஜி ஸ்மார்ட் போனை அறிமுகம் செய்ய ஜியோ திட்டம்

Jio 5G Solution Announced, Testing to Start in India as Soon
Reliance Jio ‘Made in India’ 5G solution announced at RIL AGM 2020

ரிலையன்ஸ் ஜியோ 5ஜி சேவை தொடர்பான அறிவிப்பை தற்போது வெளியிட்டு இருக்கின்றார்கள். ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் 43வது வருடாந்திர பொதுக்குழு கூட்டத்தில் இந்த அறிவிப்பை ஜியோ நிறுவனம் வெளியிட்டு இருக்கின்றார்கள்.

ஏற்கனவே ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் இந்தியாவில் 5ஜி சேவையை கொண்டு வர ஆர்வம் காட்டி வந்தார்கள், அதன்படி இந்தியாவிலேயே உருவாக்கப்பட்ட ஜியோ 5ஜி நெட்வொர்க் தயார் நிலையில் இருக்கிறது விரைவில் இதற்கான சோதனை துவங்கும் என்று ஜியோ அறிவித்துள்ளது.

ஜியோ மற்றும் கூகுள் நிறுவனங்கள் இணைந்து இந்தியாவில் குறைந்த விலைக்கு 5ஜி ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டு இருக்கின்றது. இந்தியாவில் 5ஜி ஸ்பெக்ட்ரம் கிடைக்கும் போது ஜியோவின் மேட் இன் இந்தியா 5ஜி நெட்வொர்க் தயார் நிலையில் இருக்கும் என்று கூறப்படுகிறது.

ஏற்கெனவே பல்வேறு நிறுவனங்கள் ரிலையன்ஸ் ஜியோ வில் முதலீடு செய்யத் துவங்கியுள்ளது. ஜியோ பிளாட்ஃபார்ம்களில் 7.7 சதவீத பங்குகளுக்கு கூகுள் ரூ .33,737 கோடியை முதலீடு செய்யும் என்று முகேஷ் அம்பானி இந்த கூட்டத்தில் தெரிவித்தார் 

சமீபத்தில் கூகுள் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை கூறுகையில் ஜியோ மற்றும் கூகுள் கூட்டுடன் ஸ்மார்ட்போன்கள் இல்லாத மில்லியன் கணக்கான இந்தியர்கள் இணையத்தைப் பெற முடியும் என்று கூறினார்.