30வாட் டார்ட் சார்ஜ் 10,000 எம்ஏஎச் ரியல்மி பவர்பேங்க் இந்தியாவில் அறிமுகம்

Realme introduces 30W Dart Charge 10000mAh power bank

பிரபல சீன மொபைல் தயாரிப்பு  நிறுவனம் 30வாட் டார்ட் சார்ஜ் 10000எம்ஏஎச் பவர் பேங்க் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. மேலும் இந்த பவர் பேங்க்  20 வாட், 18 வாட், 15 வாட் மற்றும் 10 வாட் சாதனங்களையும் சார்ஜ் செய்யும் என அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக இந்த சாதனம் 18வாட் சார்ஜர்களை விட 53சதவிகிதம் அதிவேக சார்ஜிங் வழங்குகிறது.இந்த பவர் பேங்க் மூலமாக  டைப் சி 30வாட் சார்ஜிங் லேப்டாப்களையும் சார்ஜ் செய்ய முடியும்.

 இதன் விலை பொறுத்த வரைக்கும் இந்தியாவில் ரூ.1,999-ஆக உள்ளது. வருகிற ஜூலை 21-ஆம் தேதி முதல் பிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வருகிறது.