Reliance cuts employees’ salary by 10 to 50%
கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்தும் விதமாக இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது இதன் காரணமாக தொழிற்சாலைகள் இயங்கவில்லை. இதையொட்டி இந்தியாவில் உள்ள மிகப்பெரிய தொழில் நிறுவனம் ரிலையனஸ் இண்டஸ்ட்ரீஸ் தனது பெரும்பாலான ஊழியர்களின் சம்பளத்தை 10 முதல் 50சதவிகிதம் வரை குறைக்க முடிவு செய்துள்ளது.
ஊரடங்கு காலத்தில் நிறுவனத்தை இயக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டதால், முகேஷ் அம்பானியும் தனது ஊதியம் அனைத்தையும் கைவிட ஒப்புக் கொண்டதாக தகவல் வெளிவந்துள்ளது.
அதுமட்டுமின்றி இந்த காலாண்டில் ஊழியர்களின் னஸ் மற்றும் செயல்திறன் மற்றும் இணைக்கப்பட்ட சலுகைகளை ஒத்தி வைக்கபட்டு உள்ளது எனவும் தெரிவித்துள்ளது.
ஆண்டுக்கு 15 லட்சத்துக்கு மேல் சம்பளம் பெறும் ஊழியர்களுக்கு 10 சதவீத
சம்பளக் குறைப்பும்,நிர்வாக குழு (இ.சி) உறுப்பினர்கள் மற்றும் மூத்த நிர்வாகிகள் உள்ளிட்ட ரிலையன்ஸ் வாரிய இயக்குனர்களுக்கு 30 முதல் 50 சதவீதம் சம்பளம் குறைக்கப்படும் என தெரிகிறது,