சியோமி நிறுவனம் Redmi Note 9T 5G மொபைலின் வெளியீட்டு தேதியை தற்போது அறிவித்துள்ளார்கள்.
சியோமி நிறுவனம் வருகிற ஜனவரி 8 ஆம் தேதியன்று ரெட்மி நோட் 9டி 5ஜி ஸ்மார்ட்போனை உலகளவில் அறிமுகப்படுத்த செய்ய உள்ளதாக தனது சமூக ஊடக கணக்குகள் மூலம் உறுதிப்படுத்தியுள்ளது.
ரெட்மி நோட் 9 டி 5 ஜி ஆதரவுடன் வரும், மேலும் இந்த மொபைல் ரெட்மி நிறுவனத்தின் குழப்பமான ரெட்மி நோட் 9 சீரிஸ் வரிசையில் இந்த மொபைலிலும் அறிமுகமாகின்றது. இந்த மொபைல் அறிமுகம் செய்வதற்கு முன்பு ஆகவே இந்த மொபைலில் புகைப்படங்கள் மற்றும் சிறப்பு அம்சங்கள் கசிந்துள்ளது.
இந்த ஸ்மார்ட்போன் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட ரெட்மி நோட் 9 5ஜி மாடலின் சர்வதேச வேரியண்ட் ஆக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது கசிந்துள்ள தகவலின்படி 4 ஜிபி + 64 ஜிபி சேமிப்பு மாறுபாட்டின் விலை யூரோ 229.90 (தோராயமாக ரூ. 20,700) மற்றும் 4 ஜிபி + 128 ஜிபி மாறுபாட்டின் விலை யூரோ 269.90 (தோராயமாக ரூ .24,300) இருக்கும் என்று தெரியவந்துள்ளது.
Ready, set, get 5G!
— Xiaomi (@Xiaomi) January 5, 2021
The era of 5G for everyone is truly here now!
Watch our Redmi Note 9T global launch event on Jan 8th, 20:00 (GMT+8) !#RedmiNote9T #ReadySet5G https://t.co/DX57eeLirW