கொரோனா வைரஸ் காரணமாக ரெட்மி எடுத்த அதிரடி முடிவு

Redmi Note 9 Pro Max release in India gets delayed Due to Coronavirus Lockdowns

ரெட்மி நிறுவனம் இந்தியாவில் மார்ச் 12ம் தேதி ரெட்மி நோட் 9 புரோ மற்றும் ரெட்மி நோட் 9 புரோ மேக்ஸ் போன்களை அறிமுகப்படுத்தியது. இதில் ரெட்மி நோட் 9 புரோ மொபைல் போனின் முதல் விற்பனை ஏற்கனவே தொடங்கிவிட்டது.

இந்நிலையில் நாளை( மார்ச் 25) ரெட்மி நோட் 9 புரோ மேக்ஸ் மொபைல் போனின் முதல் விற்பனை ஆரம்பிக்கும் என ரெட்மி ஏற்கனவே தெரிவித்திருந்தது.

நாட்டில் கோவிட்-19 நோய் மேலும் பரவாமல் தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் திட்டமிட்டபடி நாளைய தினம் இந்த மொபைலை விற்பனைக்கு கொண்டு வந்தால். மொபைலை வாங்கும் நபர்களுக்கு மொபைல் சென்று சேர தடங்கல் ஏற்படலாம் என கருதிய ரெட்மி நிறுவனம் தற்போது இதை ஒத்தி வைத்துள்ளார்கள்.