JIO Work From Home Pack : Jio 251 Plan Details 2020
கொரோனா வைரஸ் காரணமாக பல்வேறு நிறுவனங்கள் தங்களுடைய பணியாளர்களை வீட்டில் இருந்தபடியே வேலை செய்ய அறிவுறுத்தி உள்ளார்கள்.
இதை பயன்படுத்திக் கொண்டு பல்வேறு தொலைத்தொடர்பு நிறுவனங்கள் போட்டி போட்டு தங்களுடைய வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகளை கொடுத்து வருகின்றார்கள். தற்போது ஜியோ நிறுவனமும் 251 ரூபாய் ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளார்கள்.
251 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் தினமும் 2 ஜிபி அளவிலான டேட்டாவை பெறலாம். குறிப்பிட்ட டேட்டா அளவு முடிந்தபின், வாடிக்கையாளர்கள் 64 கே.பி.பி.எஸ் எனும் இணைய வேகத்தின் கீழ் தொடர்ந்து இன்டர்நெட்டை பயன்படுத்தலாம். இருப்பினும், நிறுவனம் இந்த பேக்கில் குரல் அழைப்புகள் மற்றும் எஸ்எம்எஸ் வழங்கவில்லை