மீண்டும் விலை உயர்த்தப்பட்ட Redmi Note 9 Pro Max ! காரணம் என்ன ?

Xiaomi Redmi Note 9 Pro Max prices increased

Redmi Note 9 Pro Max மொபைல் போனின் விலையில் சிறிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ரெட்மி நோட் 9 ப்ரோ மேக்ஸ் மொபைல் போனின் விற்பனை, ஜூன் 11 முதல் தொடங்கி நடத்தப்பட்டு வருகிறது.

அமேசான் மற்றும் MI.com இணையதளத்தில் பலமுறை Flash Sale நடத்தப்பட்டாலும் மொபைல்போனை வாங்கியிருந்த வாடிக்கையாளர்கள் பெரும் ஏமாற்றத்தையே அளித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

மிகக் குறைவான மொபைல்கள் விற்பனைக்கு வந்ததால் பல வாடிக்கையாளர்கள் வாங்க முடியாமல் இருந்தது. தற்போது இந்த மொபைல் போனில் விலையில் சிறிய மாற்றம் செய்யப்பட்டது அதைப் பற்றி பார்க்கலாம்…

Old PriceNew Price
6GB+64GB16,49916,999Buy
6GB+128GB17,99918,499Buy
8GB+128GB19,99919,999Buy

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் விதமாக நாடு முழுவதும் ஒரு சில பகுதிகளில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்த மொபைலை வாடிக்கையாளர்களுக்கு சரியான நேரத்தில் கொண்டு செல்ல முடியவில்லை என தெரிகிறது.

இதன் காரணமாக ரெட்மி நிறுவனம் மொபைல் போனில் விலையை சற்று உயர்த்தி ஏற்கனவே அமேசான் மற்றும் Mi.com இணையதளத்தில் மட்டும் விற்பனைக்கு இருந்த இந்த மொபைலை Fipkart. மற்றும் இதர MI ஷோரூம் களிலும் விற்பனைக்கு கொண்டுவர ரெட்மி திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.