வோடபோன் ஐடியா ரூ. 251 ரீச்சார்ஜ் திட்டம் | Vodafone Idea Rs 251 Recharge Plan
வோடஃபோன் நிறுவனம் குறிப்பிட்ட கால சலுகையாக 251 ரூபாய் ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளார்கள். இந்த திட்டத்தின் மூலமாக 28 நாட்களுக்கு 50 ஜிபி டேட்டாவை பயன்படுத்த முடியும் இந்த திட்டத்தை பற்றி முழுமையாக பார்க்கலாம்.
கொரோனா பாதிப்பு காரணமாக பெரும்பாலான ஊழியர்கள் வீட்டிலிருந்தபடியே வேலை செய்து வருகிறார்கள். இதன் காரணமாக பல்வேறு தொலைத்தொடர்பு நிறுவனங்கள் Work From Home என்கின்ற சலுகையை வாடிக்கையாளர்களுக்கு கொடுத்து வருகின்றார்கள்.
தற்போது வோடபோன் 251 ப்ளானை அறிவித்துள்ளது. இதன்படி ரூ. 251க்கு ரீசார்ஜ் செய்தால் 50 ஜி.பி. டேட்டாவை பயன்படுத்திக் கொள்ளலாம். இதன் வேலிடிட்டி 28 நாட்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதைத் தவிர்த்து போன் மற்றும் எஸ்.எம்.எஸ். அழைப்புகள் ஏதும் இந்தத் திட்டத்தில் கொடுக்கப்படவில்லை..