Redmi Note 9 Pro Max : 8 ஜிபி ரேம் மாடல் இன்று முதல் விற்பனை!

கடந்த மார்ச் மாதத்தில் ரெட்மி நிறுவனம் ரெட்மி நோட் 9 ப்ரோ, ரெட்மி நோட் 9 ப்ரோ மேக்ஸ் என இரு ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தது.  தற்போது ரெட்மி நோட் 9 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போனின் 8 ஜிபி ரேம் மாடல் மொபைல் இன்று முதல் முறையாக  விற்பனைக்கு வர இருக்கிறது. 

ரெட்மி நோட் 9 ப்ரா மேக்ஸின்  8 ஜிபி + 128 ஜிபி ஸ்டோரேஜ்  மாடல் ரூ.19,999 க்கு வாங்க கிடைக்கும். இந்த மொபைல் இன்று( ஜூலை 29) நண்பகல் 12 மணிக்கு mi.com இணையதளத்தில் விற்பனைக்கு வர இருக்கின்றது.