உங்கள் மொபைல் 15 நிமிடத்தில் முழுமையாக சார்ஜ் ஆகும் ! புதிய குவால்காம் குவிக் சார்ஜ் 5 தொழில்நுட்பம் அறிமுகம்

மொபைல் போன் பயன்படுத்தும் பெரும்பாலான வாடிக்கையாளர்கள் அதிக பேட்டரி திறன் கொண்ட மொபைல் போன்களை பெருமளவு தேர்வு செய்து வருகின்றார்கள். அப்படித் தேர்வு செய்யும் பெரும்பாலான வாடிக்கையாளர்கள் தாங்கள் பயன்படுத்தும் மொபைல் போனின் சார்ஜ் வேகம் அதிகமாக  இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள்.

இந்நிலையில் ஸ்மார்ட்போன் ப்ரோசெசர் தயாரிப்பதில் குவால்காம் பிரபலமானது  (Qualcomm) பாஸ்ட் சார்ஜ் 5 என்ற புதிய வேக சார்ஜிங் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இது ஸ்மார்ட்போன்களில் 100 வாட் சார்ஜிங் வழங்கும் திறன் கொண்டுள்ளது.

இந்த தொழில்நுட்பம் மூலமாக ஸ்மார்ட்போனை வெறும் 5 நிமிடங்களில் 0 முதல் 50 சதவீதம் வரை சார்ஜ் செய்யலாம். இது தவிர பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்ய 15 நிமிடங்களே போதுமானது. அதேபோல் இந்த புதிய குவால்காம் குவிக் சார்ஜ் 5 தொழில்நுட்பம் பேட்டரி ஆயுளையும் அதிகப்படுத்தும்.