ஏர்டெல் இலவச டேட்டா ! 1GB டேட்டா இலவசம் ? உங்களுக்கு இந்த சலுகை கிடைக்குமா !

Airtel Offering 1GB Free Data for 3 Days to Select Users

ஏர்டெல் நிறுவனம் குறிப்பிட்ட சில ரீசார்ஜ் திட்டங்களுக்கு மட்டும் இலவசமாக 1 GB டேட்டா டேட்டா சலுகையை வழங்கியதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளது. இது ரிலையன்ஸ் ஜியோவின் சலுகையைப் போன்றது. ஏற்கனவே ஜியோ நிறுவனம் தேர்ந்தெடுக்கப்பட்ட சில வாடிக்கையாளர்களுக்கு இதேபோன்ற சலுகையை அறிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக 48 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்யும் சில வாடிக்கையாளர்களுக்கு ஏர்டெல் தற்போது 4 ஜிபி டேட்டா வழங்குகிறது. இந்த திட்டத்திற்கு 3 ஜிபி டேட்டா வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது 1 ஜிபி டேட்டாவை இலவசமாக வழங்குகிறது.

இந்த 1 GB தரவின் செல்லுபடியாகும் காலம் மூன்று நாட்களுக்கு மட்டுமே என்றும் இது சோதனை அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ளது என்றும் ஏர்டெல் தெரிவித்துள்ளது.