
ரெட்மி ரசிகர்கள் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ரெட்மி நோட் 9 ஸ்மார்ட்போன் இந்தியாவில் ஜூலை 20-ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட்டது. இந்த மொபைலில் குவாட் ரியர் கேமராக்கள், ஹோல் பன்ச் டிஸ்ப்ளே போன்ற பல்வேறு சிறப்பம்சங்களுடன் வருகின்றது.
ரெட்மி நோட் 9 ஸ்மார்ட்போனின் முதல் விற்பனை இன்று(ஜூலை 24) நண்பகல் 12 மணிக்கு mi.com, அமேசான் தளங்களில் விற்பனைக்கு வருகின்றது.
ரெட்மி நோட் 9 விலை :
ரெட்மி நோட் 9 ஸ்மார்ட்போன் மொத்தம் மூன்று வேரியண்டுகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. 4 ஜிபி ரேம் + 64 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் ஆனது ரூ.11,999 க்கு அறிமுகமாகி உள்ளது. இதன் 4 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷனும் உள்ளது, இதன் விலை ரூ.13,499, ஆகும்.