ரெட்மி நோட் 10 சீரிஸ் இந்தியாவில் மிக விரைவில் அறிமுகம் ? எப்போது தெரியுமா !

இந்தியாவில் ரெட்மி நோட் 10 சீரிஸ் வெளியீட்டு தேதி பிப்ரவரி 10 ஆம் தேதி அறிவிக்கப்படும் என்று புதிய டீசர் வீடியோவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ரெட்மி நோட் 10 சீரிஸ் ஸ்மார்ட் போன்கள் இந்திய சந்தையில் மிக விரைவில் அறிமுகம் செய்யப்படுகின்றது. ஷியோமி இந்தியா நிர்வாக இயக்குனர் மனும்குமார் ஜெயின் மற்றும் ரெட்மி பிசினஸ் நிறுவனத்தின் தலைவர் சினேகா டெய்ன்வாலா டீசர் வீடியோக்களை ட்வீட் செய்துள்ளனர்.

இந்த டீசர் வீடியோவில் ரெட்மி நோட் 10 சீரிஸ் ஸ்மார்ட் போன் பிப்ரவரி 10 அன்று காலை 10:10 மணிக்கு வெளியாகும் போன்ற தகவல்கள் இருந்தாலும். அன்றைய தினம்தான் ரெட்மி நோட் 10 சீரிஸ்  ஸ்மார்ட் போன் எப்பொழுது வெளியாகும் என்கின்ற தகவலை அறிவிப்பார்கள் என்று நாங்கள் நம்புகின்றோம்.