ரியல்மி நார்சோ 30 விரைவில் இந்தியாவில் அறிமுகம் !

ரியல்மி நிறுவனம் இந்திய சந்தையில் மிக விரைவில் ரியல்மி நார்சோ 30 ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் ரீடெயில் பாக்ஸ் எப்படி இருக்கும் என்கின்ற படத்தை தற்போது ரியல்மி சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து உள்ளது. 

ரியல்மி நிறுவனம் 2020 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் ரியல்மி நார்சோ 20  சீரிஸ் மொபைல்களை அறிமுகம் செய்திருந்தது. இந்த ஸ்மார்ட்போனின் வெற்றியை தொடர்ந்து ரியல்மி நார்சோ 30 மொபைல் மிக விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிகிறது.

சமீபத்தில் வெளியாகிய Leaks அடிப்படையில் இந்த மொபைல் இந்திய மார்ச் மாதத்தில் அறிமுகம் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. ரியல்மி நிறுவனம் நார்சோ 30 சீரிஸ் ஸ்மார்ட்போன்களுக்கான டீசரை வெளியிட்டு உள்ளது. டீசருடன் புதிய ஸ்மார்ட்போனிற்கான ரீடெயில் பாக்ஸ் எப்படி இருக்க வேண்டும் என வாடிக்கையாளர்களிடம் ரியல்மி கேள்வி எழுப்பி உள்ளது.

Also Read : ரெட்மி நோட் 10 சீரிஸ் இந்தியாவில் மிக விரைவில் அறிமுகம் ? எப்போது தெரியுமா !

ரியல்மி நார்சோ 30 சீரிஸ் ஸ்மார்ட் போன்கள் இந்திய சந்தையில் 8 ஆயிரம் ரூபாயில் இருந்து 20 ஆயிரம் ரூபாய்க்குள் அறிமுகம் செய்ய ரியல்மி திட்டமிட்டுள்ளது. தற்போது வரைக்கும் இந்த ஸ்மார்ட்போனின் ரீடெயில் பாக்ஸ் மற்றும் பெயர் தவிர வேறு எந்த தகவலையும் ரியல்மி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை..