மார்ச் மாதத்தில் Redmi Note 10 Series இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுகிறது !

ரெட்மி நிறுவனத்தின் ரெட்மி நோட் 10 மற்றும் ரெட்மி நோட் 10 ப்ரோ ஆகிய   ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் எப்போது அறிமுகம் செய்யப்படும் என்கின்ற தகவலை ரெட்மி நிறுவனம் அறிவித்துள்ளார்கள். 

ரெட்மி நிறுவனம் பிப்ரவரி 10ஆம் தேதி காலை 10.10க்கு Redmi Note 10 Series தொடர்பான ஒரு தகவலை அறிவிக்கப் போவதாக ஏற்கனவே அறிவித்திருந்தார்கள். அதன்படி ஒரு தகவலை ரெட்மி நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள்.

ரெட்மி வெளியிட்டிருக்கும் டீசர் வீடியோவில் Redmi Note 10 Series வருகிற மார்ச் மாதத்தில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று ரெட்மி நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கின்றது. 

மேலும், ரெட்மி நோட் 10 மற்றும் ரெட்மி நோட் 10 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் இரண்டும் ஒன்றாக வெளியிடப்படும் என்று தெரிகிறது. ரெட்மி நோட் 10 மற்றும் நோட் 10 ப்ரோ மொபைலின் விலை மற்றும் அம்சங்கள் பற்றி எதுவும் தெரியவில்லை. 

சமீபத்தில் Leaks அடிப்படையில் ரெட்மி நோட் 10 சீரிஸ்  ஸ்மார்ட்போன்களில் 120 ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளே பொருத்தப்படலாம்  என்று தெரிகிறது.