நோக்கியா நிறுவனம் இந்தியாவில் நோக்கியா 5.4 மற்றும் நோக்கியா 3.4 என்கின்ற இரு மொபைலை Mid-Range விலையில் அறிமுகம் செய்துள்ளார்கள்.
இந்தியாவில் நோக்கியா 5.4 மற்றும் நோக்கியா 3.4 விலை மற்றும் விவரக்குறிப்புகள் இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நோக்கியா 5.4 மொபைல் குவாட் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது, நோக்கியா 3.4 மூன்று பின்புற கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது.மேலும் இரண்டு தொலைபேசிகளும் குவால்காம் ஸ்னாப்டிராகன் SoC களால் இயக்கப்படுகின்றன.
நோக்கியா 5.4 மற்றும் நோக்கியா 3.4 மொபைல்கள் அண்ட்ராய்டு 10 உடன் வருகிறது. மிக விரைவில் இந்த ஸ்மார்ட்போன்களுக்கு ஆண்ட்ராய்ட் 11 அப்டேட் கொடுக்கப்படும் என்று நோக்கியா உறுதியளித்துள்ளது. எச்.எம்.டி குளோபல் இந்தியாவில் அறிமுகப்படுத்திய இரண்டு தொலைபேசிகளும் முதலில் ஐரோப்பிய சந்தையில் கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் நோக்கியா 5.4 ஸ்மார்ட்போனின் விலை :
இந்தியாவில் நோக்கியா 5.4 ஸ்மார்ட்போனின் 4 ஜிபி + 64 ஜிபி ஸ்டோரேஜ் மாடலானது ரூ.11,999 க்கும், 6 ஜிபி + 64 ஜிபி ஸ்டோரேஜ் மாடலானது ரூ.15,499 க்கும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இன்னும் மொபைல் பிப்ரவரி 17 நன்பகல் மணிக்கு பிளிப்கார்ட் மற்றும் நோக்கியா இந்தியா வலைத்தளம் வழியாக விற்பனைக்கு வர இருக்கிறது.
இந்தியாவில் நோக்கியா 3.4 ஸ்மார்ட்போனின் விலை :
இந்தியாவில் நோக்கியா 3.4 ஸ்மார்ட்போனின் 4 ஜிபி + 64 ஜிபி ஸ்டோரேஜ் மாடலானது ரூ.11,999 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த மொபைல் பிப்ரவரி 20ஆம் தேதி முதல் பிளிப்கார்ட் அமேசான் மற்றும் நோக்கியா வலைத்தளம் மூலமாக சென்னைக்கு வருகிறது.
RAM | Storage | Price | Buy |
4GB | 64GB | Rs. 11,999 |
Nokia 5.4 specifications (India)
Launch Date | 2020, Feb 10 (India) |
Display | 6.39-inch 20:9 aspect ratio HD+ |
Weight | 181 g |
Colors | Dusk and Polar Night |
SIM | Dual SIM (Nano-SIM, dual stand-by) |
MEMORY Card slot | Expandable up to 512GB |
Rear camera | 48 MP, f/1.8, (wide), PDAF 5 MP, 13mm (ultrawide) 2 MP, (macro) 2 MP, (depth) |
Video(Rear) | 4K video recording at 30fps |
Front camera | 16 MP, f/2.0 |
Video (Front) | 1080p@30fps |
Fingerprint sensor | Rear-mounted |
Chipset | Snapdragon 662 |
GPU | Adreno 610 |
OS | Android 10 |
BATTERY | 4,000mAh battery |
Charging | 10W Type-C charger |
Nokia 3.4 specifications (India)
Launch Date | 2020, Feb 10 (India) |
Display | 6.39-inch HD+ display |
Weight | 180 g |
Colors | Charcoal, Dusk, and Fjord |
SIM | Dual SIM (Nano-SIM, dual stand-by) |
MEMORY Card slot | Expandable up to 512GB |
Rear camera | 13 MP, (wide), PDAF 5 MP, (ultrawide) 2 MP, (depth) |
Video(Rear) | 1080p@30fps |
Front camera | 8 MP |
Video (Front) | 1080p@30fps |
Fingerprint sensor | Rear-mounted |
Chipset | Qualcomm Snapdragon 460 |
GPU | Adreno 610 |
OS | Android 10 |
BATTERY | 4000 mAh |
Charging | 10W Charging |