பட்ஜெட் விலையில் நோக்கியா 5.4 ஸ்மார்ட்போன் அறிமுகம்

எச்எம்டி குளோபல் நிறுவனத்திடம் நோக்கியா 5.4 ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது இதன் விலை மற்றும் சிறப்பம்சங்கள் பற்றி பார்க்கலாம்..

ஐரோப்பாவில் நோக்கியா 5.4 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த மொபைல் Dusk மற்றும் Polar Night வண்ண விருப்பங்களில் வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் எப்போது வெளியாகும் என்பதை பற்றிய தகவல்கள் வெளியாகவில்லை.

இந்த ஸ்மார்ட்போனில்  6.39 இன்ச் அளவிலான எச்டி + டிஸ்ப்ளே, ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 662 SoC, குவாட் ரியர் கேமரா அமைப்பு, 4,000 எம்ஏஎச் பேட்டரி போன்ற பல்வேறு சிறப்பம்சங்கள் இந்த மொபைல் போனில் உள்ளது.

புகைப்படம் எடுப்பதற்காக பின்பக்கத்தில் 48MP (f / 1.8) முதன்மை சென்சார், 8MP அல்ட்ரா-வைட் சென்சார் மற்றும் 2MP மேக்ரோ லென்ஸ், 2MP டெப்த் சென்சார் கொடுக்கப்பட்டுள்ளது.. முன்பக்கத்தை பொறுத்தவரை, 16 மெகாபிக்சல் செல்பீ கேமரா சென்சாருடன் வருகிறது.

நோக்கியா 5.4  விலை :

நோக்கியா 5.4 மொபைல் 4 ஜிபி ரேம் + 64 ஜிபி ஸ்டோரேஜ் மாடல் ஆனது இந்திய மதிப்பின்படி தோராயமாக ரூ.16,900 என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நோக்கியா 5.4 ஸ்மார்ட்போனில் 4 ஜிபி ரேம் + 128 ஜிபி மற்றும் 6 ஜிபி ரேம் + 64 ஜிபி ஸ்டோரேஜ் மாடல்களும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 

Nokia 5.4 specifications (Europe)

Launch Date2020, December 15 (Europe))
Display6.39-inch 20:9 aspect ratio HD+
Weight181 g 
ColorsNordic Sky and Purplish Dusk
SIMSingle SIM (Nano-SIM) or Dual SIM (Nano-SIM, dual stand-by)
MEMORY Card slot Expandable up to 512GB
Rear camera48 MP, f/1.8, (wide), PDAF
5 MP, 13mm (ultrawide)
2 MP, (macro)
2 MP, (depth)
Video(Rear) 4K video recording at 30fps
Front camera16 MP, f/2.0
Video (Front)1080p@30fps
Fingerprint sensorRear-mounted
ChipsetSnapdragon 662
GPUAdreno 610
OSAndroid 10
BATTERY4,000mAh battery
Charging10W Type-C charger