EMI-யில் ப்ரீபெய்ட் திட்டம்! Vi உடன் கை கோர்த்தது பஜாஜ் பைனான்ஸ்

வோடாபோன்-ஐடியா(VI) நிறுவனங்கள் பஜாஜ் பைனான்ஸ் உடன் இணைந்து EMI-யில் ப்ரீபெய்ட் திட்டங்களை வாடிக்கையாளருக்கு வழங்க உள்ளது. இதன் முழு விபரங்களை பார்க்கலாம்..

மாதத் தவணையில் ஸ்மார்ட்போன்களை வாங்கும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை இந்தியாவில் அதிகம், பஜாஜ் பைனான்ஸ் வாடிக்கையாளர்களுக்கு அதிக அளவிலான ஸ்மார்ட்போன்களை தவணை முறையில் வழங்கி வருகிறது. இந்நிலையில் வோடாபோன்-ஐடியா(VI) மற்றும் பஜாஜ் பைனான்ஸ் இணைந்து ப்ரீபெய்ட் திட்டத்தை EMI-யில் கொடுக்க முடிவு செய்துள்ளது

நீங்கள் EMI-ல் ஒரு ஸ்மார்ட்போனை வாங்குகிறீர்கள் என்றால், அழைப்பு அல்லது இணையத்திற்கு தனி ப்ரீபெய்ட் திட்டத்தை எடுக்க வேண்டிய அவசியமில்லை இனி இல்லை, மொபைல் போன் வாங்கும் போதே ஆறு மாதங்கள் அல்லது ஒரு வருடத்தின் அடிப்படையில் EMI கணக்கிடப்படும். 

அதாவது மொபைலின் விலை மற்றும் ப்ரீபெய்ட் திட்டத்தின் விலை ஆறு அல்லது ஒரு வருட அடிப்படையில் EMI கணக்கிடப்படும். ஒரு வாடிக்கையாளர் ஆறு மாதங்களுக்கு ரூ .1,197 வோடபோன்-ஐடியா ப்ரீபெய்ட் திட்டத்தை தேர்வு செய்தால், அவர் EMI-யில் 200 ரூபாய் செலுத்த வேண்டியிருக்கும்.அதேபோல் ஒரு வாடிக்கையாளர் ஒரு வருடத்திற்கு ஒரு வருட ரீசார்ஜில், வாடிக்கையாளர்கள் ரூ.2,399 திட்டத்திற்கு ஒவ்வொரு மாதமும் 200 ரூபாய் செலுத்த வேண்டும்.

இந்த சலுகையை வாடிக்கையாளர்கள் பயன்படுத்துவதன் மூலமாக ஒவ்வொரு மாதமும் ரூ .49 மற்றும் ரூ .99 மதிப்புள்ள தள்ளுபடியைப் பெறுவார்கள் என்று Vi நிறுவனம் கூறியுள்ளார்கள்.