ஏர்டெல், வோடபோன்-ஐடியா மீது ரிலையன்ஸ் ஜியோ புகார்.!

விவசாயிகளின் போராட்டத்தை ஒரு வாய்ப்பாக பயன்படுத்தி ஜியோ நிறுவனம் குறித்து தவறான பிரசாரங்களை முன்னெடுத்து வருவதாக வோடபோன்-ஐடியா(VI)  மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் மீது ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் குற்றம் சாட்டியுள்ளது.

விவசாயிகள் அன்மையில் நிறைவேற்றிய மூன்று விவசாய மசோதாக்களை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்கள். இந்தப் போராட்டத்தில் ஒரு பகுதியாக அதானி மற்றும் அம்பானி நிறுவனங்களின் பொருட்களை தவிர்த்து வருகின்றனர். 

இந்நிலையில் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம்  தன்னுடைய சக போட்டியாளரான வோடபோன் ஐடியா மற்றும் பாரதி ஏர்டெல் மீது டிராய் ஆணையத்தில் புகார் கொடுத்துள்ளது. ஜியோ நிறுவனம் அளித்துள்ள புகாரில் விவசாயிகளின் போராட்டத்தை ஒரு வாய்ப்பாக பயன்படுத்தி ஏர்டெல், வோடபோன் நிறுவனங்கள் எம்.என்.பி போர்ட் இணைப்பு பெற தவறான பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஜியோ நிறுவனம் குற்றம் சாட்டியுள்ளது.


இந்த அவதூறு பிரச்சாரங்கள் தொலைத்தொடர்பு விதிகளுக்கு எதிரானது, இந்த விதி மீறல் காரணமாக வோடபோன்-ஐடியா(VI)  மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஜியோ நிறுவனம் கூறியுள்ளது.