இலவச சிம் கார்டு சலுகையை அறிவித்தது பிஎஸ்என்எல்

பிஎஸ்என்எல் நிறுவனம் இலவச சிம் கார்டு சலுகையை அறிவித்துள்ளது. இதன் முழுமையான விவரங்களை பற்றி பார்க்கலாம்.. 

பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு நாடு முழுவதும் கணிசமான 4 ஜி கவரேஜ் இல்லாமல் இருந்தாலும் வாடிக்கையாளர்களுக்கு தொடர்ந்து பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகிறார்கள் அந்த வகையில் தற்போது இலவச சிம் கார்டு சலுகையை பிஎஸ்என்எல் அறிவித்துள்ளது. 

BSNL Free SIM Card Offer: பிஎஸ்என்எல் சிம் கார்டை இலவசமாக பெறுவது எப்படி?

பிஎஸ்என்எல் நிறுவனம் தங்களுடைய வாடிக்கையாளர்களுக்கு  புதிய சிம் கார்டுகளை டிசம்பர் 17, 2020 முதல் ஜனவரி 1, 2021 வரை இலவசமாக வழங்குகின்றது, அதிக எண்ணிக்கையிலான புதிய பயனர்களை ஈர்க்க இந்த புதிய திட்டத்தை தொடங்குவதாக பிஎஸ்என்எல் அறிவித்துள்ளது.

இந்த சலுகையைப் பெற பயனர்கள் அனைத்து விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் பின்பற்ற வேண்டும். பிஎஸ்என்எல் நிறுவனத்திடமிருந்து இலவச சிம் கார்டைப் பெற, சந்தாதாரர்கள் முதல் ரீசார்ஜ் ரூ. 100 அல்லது அதற்கு மேற்பட்ட முதல் ரீசார்ஜ் (எஃப்ஆர்சி) திட்டத்தைப் பெற வேண்டும். ரூ .100 செலுத்திய பின்னர் 16 நாட்களுக்குள் நிறுவனம் இலவச சிம் வழங்கும்.